/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்வாரிய அலுவலகம்: எம்.பி., திறப்பு
/
மின்வாரிய அலுவலகம்: எம்.பி., திறப்பு
ADDED : நவ 15, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில் உள்ள ஆடையூர், பக்கநாடு கிராம மின் நுகர்வோர், கட்டணம் செலுத்தல் உள்ளிட்டவைக்கு, 6 கி.மீ.,ல் உள்ள, ஜலகண்டாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவ-லகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.
இதனால், நுகர்வோர் கோரிக்கைப்படி, பக்கநாடு, வண்ணாங்குட்டையில், புதிதாக உதவி பொறியாளர் மின் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. கண்காணிப்பு பொறியாளர் தாரணி தலைமை வகித்தார். தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, அலுவலகத்தை திறந்து வைத்தார். செயற்பொறியாளர் தமிழ்மணி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவா க-வுண்டர், ஒன்றிய செயலர் நல்லதம்பி பங்கேற்றனர்.

