/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை
/
த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை
த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை
த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை
ADDED : நவ 20, 2025 02:54 AM
கரூர், கரூர் த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த, 1 முதல் கரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று காலை, 10:30 மணிக்கு கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் (பொது) கணிகை மார்த்தாள் உள்பட 8 அதிகாரிகள் மற்றும் இரண்டு ஊழியர்கள் என, 10 பேர் சி.பி.ஐ., விசாரணைக்காக ஜீப்பில் பயணியர் மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம், த.வெ.க., பிரசார கூட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட புகார் குறித்தும், மின் துண்டிப்புக்கான காரணம், அதற்கான ஆவணங்கள் மின் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட, பல்வேறு கேள்விகளை சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். மூன்று மணி நேர விசாரணைக்கு பிறகு மதியம், 1:30 மணிக்கு மின்வாரிய அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

