/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முறைகேடாக மின் இணைப்பு மின் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
/
முறைகேடாக மின் இணைப்பு மின் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 03, 2025 11:54 PM
வாழப்பாடி:சேலம் மாவட்டம், தும்பல் மின் பிரிவு அலுவலகம் சார்பில், மின் இணைப்புகளை முறைகேடாக வழங்கி, வருவாய் ஈட்டுவதாக புகார் எழுந்தது.
வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி கள ஆய்வு செய்து, முறைகேடு இணைப்பில் இருந்து, 16 மின் மீட்டர்கள் கையகப்படுத்தப்பட்டன. நேரடி இணைப்பு வழங்கப்பட்டதாக, 5 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டன.
விசாரணையில், 2 ஆண்டுக்கு மேலாக இந்த முறைகேடு நடப்பது தெரிந்தது. இதையடுத்து முறைகேடு பயனாளிகள், 21 பேரிடம், 2.22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.மேலும், 40 பக்க அறிக்கை, சேலம் வட்ட மேற்பார்வை பொறியாளருக்கு தாக்கலானது.
இதையடுத்து தும்பல் உதவி பொறியாளர் கார்த்திக், மின்பாதை ஆய்வாளர்கள் தனசேகர், செந்தில்குமார், வணிக ஆய்வாளர் ராஜ்குமார், போர்மேன் அய்யாசாமி, ஒயர்மேன்கள் காசிலிங்கம், சரவணன், மாணிக்கம் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, கோட்ட செயற்பொறியாளர், நேற்று உத்தரவிட்டார்.