ADDED : ஜூன் 03, 2025 01:21 AM
சேலம், சேலம், கொண்டலாம்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 45. இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி
வருகிறார்.
ஓட்டலில் வேலுார் காட்பாடியை சேர்ந்த தேவேந்திரகுமார், 40, என்பவர் சப்ளையராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தேவேந்திர குமார் வேலை முடித்து, அருகில் உள்ள தனது அறைக்கு சென்றார். அங்கு அவரது நண்பர்கள் மனோஜ்குமார், செந்தில்குமார் ஆகிய இருவரும் துாங்கி கொண்டிருந்தனர். தேவேந்திரகுமாரும் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் காலை தேவேந்திரகுமார் வேலைக்கு வரவில்லை. சந்தேகமடைந்த ஓட்டல் உரிமையாளர்
பழனிசாமி, மற்ற இருவரையும் பார்த்து வரும்படி கூறியுள்ளார். அவர்கள்
போய் பார்த்த போது, தேவேந்திர குமார் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி
போலீசில் பழனிசாமி புகார் அளித்தார்.
தேவேந்திரகுமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.