ADDED : ஜூன் 05, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; மேட்டூர், 21வது வார்டு, பெரியண்ண கவுண்டர் நகரில் சமீபத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சிலர், சாலையின் ஒரு பகு-தியை ஆக்கிரமித்து, சிமென்ட் தளம் அமைத்து, 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' போட்டு கடைகளாக ஏற்-பாடு செய்து ஆக்கிரமித்தனர்.
இதுகுறித்து மக்கள் புகாரால், நேற்று மதியம், நகராட்சி வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், நகரமைப்பு ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, உடனே பொக் லைன் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை இடி த்து அகற்றினர். அதேநேரம் மேற்கூரை சேதம் அடையாமல் அகற்றிக்கொள்ள, ஒருநாள் அவ-காசம் வழங்கிவிட்டு சென்றனர்.
