/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 21, 2024 01:26 AM
சேலம், டிச. 21-
தேசிய மின்சிக்கன வார விழா, கடந்த, 14ல் தொடங்கி, நேற்று வரை கடைப்பிடிக்கப்பட்டது. அதன் நிறைவாக, சேலம் கிழக்கு மின் கோட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மின்வாரிய (பொது) செயற்பொறியாளர் புஷ்பலதா தொடங்கி வைத்தார். உடையாப்பட்டியில் உள்ள வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம், அம்மாபேட்டை ரவுண்டானா சந்திப்பில் நிறைவடைந்தது. இதில் மின்சிக்கனம், மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின் ஊழியர்கள்
பங்கேற்றனர்.அதேபோல் ஓமலுாரில் பேரணி நடந்தது. ஓமலுார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், மின் ஊழியர்கள் உள்பட பலர், மின் பாதுகப்பு, மின் சிக்கனம் குறித்த பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆத்துார் மின்வாரிய கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் ராணி துவக்கி வைத்தார். மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள், மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சாலை, ரயிலடி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியே சென்று விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.வாழப்பாடி கோட்ட மின்வாரியம் சார்பில் நடந்த பேரணியை, சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன்(பொ), உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.
இடைப்பாடியில் நடந்த பேரணியை, கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி தொடங்கி வைத்தார். பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, சேலம் பிரதான சாலை வழியே சென்று பயணியர் விடுதியில் முடிந்தது.