ADDED : ஜூலை 28, 2026 05:43 AM
வாழப்பாடி; ஆத்துார் அருகே ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் அன்-புக்கரசி, 42. இவர் அவரது கணவர் முனியனுடன் கருத்து வேறுபாடு காரணமாக, வாழப்பாடி அய்யா கவுண்டர் தெரு பகுதியில் வாடகை வீட்டில், அவரது ஒரே மகள் கோபிகா, 20. என்ப-ருடன் வசித்து வருகிறார். கோபிகா சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்., 4ம் ஆண்டு படித்தார்.
நேற்று முன்தினம், அன்புக்கரசி, சேலத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து மொபைல் போன் மூலம் கோபிகாவை தொடர்பு கொண்டுள்ளார். அவர் பதில் அளிக்காத நிலையில், மாலை 6:00 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
அன்புக்கரசி கூச்சலிட்டும், கோபிகா கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது, கோபிகா மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கல்லுாரியில் பாட
சுமை அதிகமாக இருந்ததால், மன அழுத்தத்தில் கோபிகா தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள-தாக, வாழப்பாடி போலீசார்
தெரிவித்தனர்.
