ADDED : மே 12, 2026 04:43 AM
சேலம்: சேலத்தில், பிறந்த நாளன்றே விபத்தில் இன்ஜினியர் மாணவர் இறந்தார்.
சேலம், ஆட்டையாம்பட்டி அருகே பிச்சாம்பாளையத்தை சேர்ந்-தவர் துரைசாமி மகன் கி ேஷார், 19. காக்காபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு நேற்று முன்தினம் பிறந்-தநாள். இதை முன்னிட்டு வீட்டில் இருந்த கிேஷார் மதியம், 3:30 மணிக்கு காக்கா பாளையத்தில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட நினைத்து, தனது பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார்.கண்டர்குல மாணிக்கம் பகுதியில் சென்ற போது, எதிரே என்பீல்ட் புல்லட்டில் வந்த கூலிப்பட்டியை சேர்ந்த பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் மனோஜ் வந்துள்ளார். இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி இரவு, 11:30 மணிக்கு கிேஷார் உயிரிழந்தார். மனோஜ் தனியார் மருத்-துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
