தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்ஜினியரிங் மாணவர்கள் மோதல்

 இன்ஜினியரிங் மாணவர்கள் மோதல்

 இன்ஜினியரிங் மாணவர்கள் மோதல்


ADDED : செப் 26, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், கருப்பூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் இருதரப்பாக மோதிக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கே.எட்டிப்பட்டி, கூணம்பட்டியை சேர்ந்தவர் சச்சின், 20. சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில், 4ம் ஆண்டு படிக்கிறார்.

கடந்த, 24ல், அதே பிரிவை சேர்ந்த, 3ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் மின்னியல் பிரிவை சேர்ந்த மாணவர்கள், தொழிற்சாலைகளை பார்வையிட, மைசூரு, கொச்சின் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 3ம் ஆண்டு மாணவர்கள் சிலர், பட்டாசு வெடிக்க, அதில் இருந்து சிதறிய நெருப்பு, மாணவர் தேனிஷ் காலில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால், மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, தங்கியிருந்த தனியார் விடுதிக்குள் சென்ற மாணவர்கள், இரு கோஷ்டிகளாக சண்டையிட்டுக் கொண்டனர். இதில், சாப்பாடு தட்டால் சச்சின் தாக்கப்பட, தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

அவர், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சச்சின் புகாரில், மாணவர்கள் பிரவீன், தினேஷ் மீது வழக்கு பதிந்து, கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us