/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்., முதல்வராக தீர்த்தக்குட ஊர்வலம்
/
இ.பி.எஸ்., முதல்வராக தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : பிப் 20, 2026 05:39 AM
மேட்டூர்: அ.தி.மு.க.,வின், கொளத்துார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், பொதுச்செயலர் இ.பி.எஸ்., முதல்வராக வேண்டி, காவேரிபுரம் ஊராட்சி நாகேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து, நேற்று மாலை, 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கோவிந்தபாடி திரவுபதி அம்மன் கோவிலில் பேரணி நிறைவடைந்தது. தீர்த்தக்-குடம் எடுத்த பெண்களுக்கு புடவை, குடம் கொடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
அமைப்பு செயலர் சந்திரசேகரன், மகளிர் அணி மாவட்ட செயலர் லலிதா, ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் வெங்கடா-சலம், வக்கீல் பிரிவு மாவட்ட செயலர் சித்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொரு-ளாளர் பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்-கேற்றனர்.

