/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் இ.பி.எஸ்.,
/
சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் இ.பி.எஸ்.,
சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் இ.பி.எஸ்.,
சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் இ.பி.எஸ்.,
ADDED : ஏப் 23, 2024 04:24 AM
ஓமலுார்: லோக்சபா தேர்தல் பணிகளை முடித்து கொண்டு, நேற்று இ.பி.எஸ்., விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இ.பி.எஸ்., தீவிர சுற்று பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஓட்டுப்பதிவுக்கு முதல் நாளில் சொந்த ஊரான, சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்துக்கு வந்தார்.
அங்கு குடும்பத்தினருடன் வரிசையில் நின்று ஓட்டளித்தார். தொடர்ந்து இரண்டு நாள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று மாலை, சேலத்திலிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து, 5:30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
சேலம் விமான நிலையத்தில் ஓமலுார் எம்.எல்.ஏ.,மணி, வீரபாண்டி எம்.எல்.ஏ.,ராஜமுத்து, ஓமலுார் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், இ.பி.எஸ்.,சை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.