ADDED : செப் 20, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அதன் பின்புறம் உள்ள கிளை நுாலக வளாகத்தில், ஏராளமான புங்க மரங்கள் உள்ளன. அதற்கு கீழ் பலர் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த நிலையில், மரத்தில் கூடு கட்டி வசித்த கம்பளி புழுக்கள், அவர்கள் மீது விழுந்து உடலில் அரிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நேற்று அளித்த தகவல்படி, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், மரத்தில் தண்ணீரை பீச்சியடித்து கம்பளி புழுக்களை அகற்றினர். தொடர்ந்து அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் கூட்டமாக காணப்பட்ட கம்பளி புழுக்களையும் அகற்றினர்.

