ADDED : ஜன 05, 2026 04:53 AM

இடைப்பாடி: கொங்கணாபுரம் முத்து மாரத்தான் குழு சார்பில், 29ம் ஆண்டு மாநில மாரத்தான் போட்டி, அதே பகுதியில் நேற்று நடந்தது. அதில் ஆண்களுக்கு நடந்த, 42 கி.மீ., முழு மாரத்தான் போட்டியில், 2 மணி நேரம், 26 நிமிடம், 22 வினாடியில் ஓடிய, ஊட்டியை சேர்ந்த நாகேஷ்பவார் முதலிடம் பிடித்து, 50,000 ரூபாய் பரிசு வென்றார். மேலும் கடந்த ஆண்டு சாதனையை முறியடித்ததால், கூடுதலாக, 25,000 ரூபாய் பரிசு வென்றார். கோவையை சேர்ந்த ஹரிஷ், 2ம் இடம் பிடித்து, 30,000 ரூபாய், சிவகிரியை சேர்ந்த சிவானந்தம், 3ம் இடம் பிடித்து, 15,000 ரூபாய் பரிசு பெற்றனர்.
பெண்களுக்கு நடந்த, 42 கி.மீ., முழு மாரத்தானில், ஈரோட்டை சேர்ந்த சவீதா, 3 மணி நேரம், 37 நிமிடம், 27 வினாடியில் ஓடி முதலிடம் பிடித்து, 50,000 ரூபாய் பரிசு வென்றார். நாகலுாரை சேர்ந்த ரீனா, 2ம் இடம் பிடித்து, 30,000 ரூபாய், பொள்ளாச்சியை சேர்ந்த சந்தியா, 3ம் இடம் பிடித்து, 15,000 ரூபாய் பரிசு பெற்றனர்.ஆண்களுக்கு நடந்த, 21 கி.மீ., அரை மாரத்தானில், ஒரு மணி நேரம், 8 நிமிடம், 31 வினாடியில் ஓடிய மாரிசரத் முதலிடம் பிடித்து, 30,000 ரூபாய் பரிசு வென்றார். மேலும் கடந்த ஆண்டு சாதனையை முறியடித்ததால், கூடுதலாக, 15,000 ரூபாய் பரிசு பெற்றார். அலெக்ஸ்குமார், 2ம் இடம் பிடித்து, 15,000 ரூபாய், வினோத்குமார், 3ம் இடம் பிடித்து, 7,000 ரூபாய் பரிசு பெற்றனர்.
பெண்களுக்கு நடந்த, 21 கி.மீ., அரை மாரத்தானில் சவுமியா, ேஷாபியா, பவித்ரா முதல் மூன்று இடங்களை பிடித்து, அவர்கள் முறையே, 30,000, 15,000, 7,000 ரூபாய் பரிசு பெற்றனர்.
அதேபோல், 10, 5, 3 கி.மீ., ஓட்டம், பெரியவர்களுக்கு, 8 கி.மீ., நடைபயணம் உள்பட, 11 பிரிவுகளில் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், 1,100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, கொங்கணாபுரம் நாச்சியப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. முத்து மாரத்தான் அறக்கட்டளை தலைவர் ஆயிகவுண்டர், செயலர் மணிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
