தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பிரிந்து வாழும் மனைவியின் மொபட் தீ வைத்து எரிப்பு

பிரிந்து வாழும் மனைவியின் மொபட் தீ வைத்து எரிப்பு

பிரிந்து வாழும் மனைவியின் மொபட் தீ வைத்து எரிப்பு


ADDED : ஜூன் 09, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்; பிரிந்து வாழும் மனைவியின் மொபட்டை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, சேதப்படுத்திய-வரை போலீசார் தேடுகின்றனர்.

மேட்டூர், கருமலைக்கூடல், சின்னையரெட்டி தெரு மணி மகள் மணிமேகலை, 30. மேச்சேரி அடுத்த புதுகாளிகவுண்டனுார் கூலி தொழிலாளி நவீன்குமார், 35. இருவருக்கும், 2017ல் திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக, 2025 முதல் மணிமேகலை கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்தார்.மேலும், மணிமேகலை கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மேட்டூர் குடும்ப நல நீதிமன்-றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்நிலையில் கடந்த, 5ல் மாலை, 4:30 மணிக்கு நவீன்குமார் மொபைலில் மணிமேகலையிடம் பேசி தகராறு செய்து, அவருக்கு கொலை மிரட்டல்

விடுத்துள்ளார்.

அன்றைய தினம் இரவு, 11:00 மணிக்கு மணிமே-கலை வீட்டு முன் நிறுத்தியிருந்த அவரது ேஹாண்டா டியோ மொபட்டை நவீன்குமார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், மொபட் எரிந்து சேதமானது. சம்பவம் குறித்து மணிமேலை கொடுத்த புகார்படி கருமலைக்-கூடல் போலீசார் நேற்று மாலை வழக்கு பதிந்து நவீன்குமாரை

தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us