/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'குளுகுளு' சூழலிலும் ஏற்காடு 'வெறிச்'
/
'குளுகுளு' சூழலிலும் ஏற்காடு 'வெறிச்'
ADDED : நவ 22, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் முழுதும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை சரிந்திருந்தது. பின் பனி மூட்டம் விலகி இதமான சூழல் நிலவுகிறது.
இருப்பினும் இரு நாட்களாக குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணியர் வந்திருந்தனர். நேற்றும் ஆங்காங்கே சிலர் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தனர். இதனால் படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடின.