/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை தி.மு.க., - நகராட்சி கவுன்சிலர் பேச்சு
/
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை தி.மு.க., - நகராட்சி கவுன்சிலர் பேச்சு
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை தி.மு.க., - நகராட்சி கவுன்சிலர் பேச்சு
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை தி.மு.க., - நகராட்சி கவுன்சிலர் பேச்சு
ADDED : அக் 30, 2024 01:31 AM
ஆத்துார், அக். 30-
நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கவுன்சிலர் மாலா: வார்டுகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், எதற்கு, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள்.
கமிஷனர் சையதுமுஸ்தபா கமால்(பொ): அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. சுகாதாரப் பணி மேற்கொள்ளப்படும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் கோபி: எங்கே மருந்து அடிக்கப்படுகிறது. கவுன்சிலர்கள் பொய் கூறுகிறோமா? வார்டுகளில் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள். 10 மாதங்களில், 3 முறை தான் கூட்டம் நடந்துள்ளது. தீர்மானத்தில் குறிப்பிடும் பணம் எங்கே செல்கிறது? அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. பொறுப்பு கமிஷனர், நீங்களும் போய்விட்டால் எதுவும் நடக்காது. நீங்களும் மீட்டிங் மட்டும் வருகிறீர்கள். கலெக்டர் ஆய்வு செய்த பின் முன்பிருந்த கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்தும் அலுவலர்கள் திருந்தவில்லை.
கமிஷனர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ்: தலைவர், ஆட்சி மீது கவுன்சிலர்கள் புகார் கூறுவதற்கு அதிகாரிகள் தான் காரணம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என மக்கள் பேசுகின்றனர். சாக்கடை, சாலை வசதிகள் தான் கவுன்சிலர்கள் கேட்கின்றனர். எந்த கட்சி கவுன்சிலராக இருந்தாலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.