தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரக்கிளை வெட்டி கடத்தல் முன்னாள் கவுன்சிலர் புகார்

மரக்கிளை வெட்டி கடத்தல் முன்னாள் கவுன்சிலர் புகார்

மரக்கிளை வெட்டி கடத்தல் முன்னாள் கவுன்சிலர் புகார்


ADDED : ஆக 22, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆத்துார்; ஆத்துார் நகராட்சியில், 20 ஆண்டுக்கு முன், புங்கன், வேம்பு, அரசு, நாவல், வாகை உள்ளிட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்-சாலை செல்லும் காமராஜர் சாலை, புதுப்-பேட்டை பகுதிகளில் சாலை இருபுறமும் மரங்கள் வளர்ந்துள்ளன.

இதில் காமராஜர் சாலையில் உள்ள தனியார் வங்கி முன், வேம்பு, புங்கன் மரங்களின் கிளை-களை, நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல், மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதுகுறித்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் கவுன்சிலர் ராஜா, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், 'இரு மரக்கிளைகளை வெட்டியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us