/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'காடையாம்பட்டி ஒன்றியத்தில் 3 ஆண்டுகளில் ரூ.123 கோடிக்கு திட்டப்பணிகள் நிறைவேற்றம்'
/
'காடையாம்பட்டி ஒன்றியத்தில் 3 ஆண்டுகளில் ரூ.123 கோடிக்கு திட்டப்பணிகள் நிறைவேற்றம்'
'காடையாம்பட்டி ஒன்றியத்தில் 3 ஆண்டுகளில் ரூ.123 கோடிக்கு திட்டப்பணிகள் நிறைவேற்றம்'
'காடையாம்பட்டி ஒன்றியத்தில் 3 ஆண்டுகளில் ரூ.123 கோடிக்கு திட்டப்பணிகள் நிறைவேற்றம்'
ADDED : நவ 09, 2024 01:07 AM
ஓமலுார், நவ. 9-
''காடையாம்பட்டி ஒன்றியத்தில், 3 ஆண்டுகளில், 123 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தில், 'மக்கள் சந்திப்பு திட்ட' முகாம், தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட பின் பேசியதாவது: காடையாம்பட்டி ஒன்றியத்தில், 3 ஆண்டுகளில், 123 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில், 5 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. மேலும் இந்த ஒன்றியத்தில், 7,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளில், 146 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 80,061 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள், பெண்கள், சுய உதவி குழுக்கள், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மேட்டூர் சப் - கலெக்டர்
பொன்மணி, தி.மு.க.,வின், காடையாம்பட்டி ஒன்றிய செயலர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், காடையாம்பட்டி பேரூர் செயலர் பிரபாகரன், காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பொற்கொடி உள்பட பலர்
பங்கேற்றனர்.
தாரமங்கலத்திலும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடந்தது. அதில் அமைச்சர் ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக, 666 மனுக்கள் பெறப்பட்டன. நகராட்சி தலைவர் குணசேகரன், கமிஷனர் காஞ்சனா, அனைத்து துறை அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
'மக்களாட்சி நடத்தும் முதல்வர்'
ஓமலுார் ஒன்றிய, 'மக்கள் சந்திப்பு' திட்ட முகாம், ஓமலுார் பைபாஸ் பகுதியில் நடந்தது. அதில் அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி, மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், 10 கோடி ரூபாய்க்கும், கருப்பூர் டவுன் பஞ்சாயத்தில், 17 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன,''
என்றார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சேலம் எம்.பி., செல்வகணபதி பேசினார். இதில், தி.மு.க.,வின் ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஓமலுார் பேரூர் செயலர் ரவி, ஓமலுார் பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், நல்லதம்பி, தாசில்தார் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.