ADDED : ஜூலை 01, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம், சுக்கம்பட்டியில், 'அட்மா' திட்டத்தில், 'உழவர் திரள் பரவலாக்கம்' கருத்தரங்கு நடந்தது.
வட்டார
தொழில்நுட்ப மேலாளர் செல்வி, பயிற்சியின் நோக்கம், பயன் குறித்து
தெரிவித்தார். துணை வேளாண் அலுவலர் பிரபாகரன், மண் பரிசோதனை, மண்வள
அட்டை குறித்து விரிவாக விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர்
கோதைநாயகி, தென்னையில் காணப்படும் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண்
வண்டு, கருந்தலைப்புழு, வெள்ளை ரூ கோஸ் கட்டுப்பாடு குறித்து
தெரிவித்தார். திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
