தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இன்ஜினியரிடம் பணம் பறிப்பு: 3 திருநங்கையரிடம் விசாரணை

இன்ஜினியரிடம் பணம் பறிப்பு: 3 திருநங்கையரிடம் விசாரணை

இன்ஜினியரிடம் பணம் பறிப்பு: 3 திருநங்கையரிடம் விசாரணை


ADDED : பிப் 02, 2024 04:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 04:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக், 38.

சென்னை, ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த இவர், நேற்று முன்தினம் சென்னை செல்வதற்கு, இரவு, 9:30 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த, 3 திருநங்கையர், கார்த்திக்கிடம் பேசி, ஆட்டோவில், 5 ரோட்டில் உள்ள அவர்களது அறைக்கு அழைத்துச்சென்றனர். பின் அவரை மிரட்டி, 'ஜிபே' மூலம், 50,000 ரூபாயை பறித்தனர். அதில், 20,000 ரூபாயை திருப்ப வழங்கிய அவர்கள், பின் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, திருநங்கையர் மியா, 23, ரஷ்னா, 25, அம்மு, 19, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us