ADDED : அக் 02, 2024 07:24 AM
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை, மோதுார், நடுத்தெருவை சேர்ந்தவர் ஆசைதம்பி, 46. கருமந்துறை மின்வா-ரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். கடந்த, செப்., 23ல், அவரது வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். கரியகோவில் போலீசார் விசார-ணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி கனகராஜ், 33, அரி-வாளில் வெட்டி கொன்றது தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஆசைதம்பி கொலை வழக்கில் இரு தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது. அதில் அதே பகுதியை சேர்ந்த கனகராஜின் மனைவி பச்சையம்மாள், 30, ஆசைதம்பிக்கு மகள் உறவு முறை. நெல் அரவைக்கு வந்தபோது பச்சையம்மாளிடம் தவறாக நடக்க ஆசைதம்பி முயன்றார். இவ-ரது தொந்தரவு அதிகளவில் இருக்க, பச்சையம்மாள், கணவரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் வீட்டில் தனியே இருந்த ஆசைதம்-பியை, கனகராஜ், கொடூரமாக கொலை செய்துள்ளார்' என்றனர்.
