/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 21, 2025 01:44 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில், பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில், மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்.எஸ்.பி., ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் மகா சபை மாநில பொதுச்செயலர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் அன்பு உள்ளிட்டோர் பேசினர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, நகர் பகுதிக்கும் விரிவுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்க்க வேண்டும். நிலவாரப்பட்டி ஊராட்சியில், ஜருகுமலை அடிவாரத்தில், மக்கள் வீடு கட்டி வசிக்கும் ஆட்சேபனைக்கு உரிய மந்தவெளி புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து, வரன்முறை படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள் நடராஜன், வெங்கடேசன், அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.