/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழப்பு
/
மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழப்பு
ADDED : செப் 20, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி, கணவாய்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ், 70. விவசாயியான இவர், நேற்று மதியம், 12:00 மணிக்கு, கால்நடை தீவன புற்களை அறுத்து, 'எக்ஸ்.எல்.,' மொபட்டில் வைத்துக்கொண்டு, ஹெல்மெட் அணியாமல், கணவாய்காடு மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது தம்மம்பட்டியில் இருந்து, கெங்கவல்லி நோக்கி வந்த, 'எஸ்.பிரஸ்சோ' கார், மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து துாக்கி வீசப்பட்ட தங்கராஜ், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த, தம்மம்பட்டியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் குமார், 40, மீது வழக்குப்பதிந்து, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.