ADDED : நவ 23, 2026 01:29 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்: பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கள்ளப்பட்டி, சத்தியநாதபுரத்தை சேர்ந்த விவசாயி துரைசாமி, 63. நேற்று காலை, 11:30 மணிக்கு, 'ஆம்பியர் - மேக்னஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டியில், வி.களத்துார் சென்றுவிட்டு,
வீரகனுாரில் இருந்து பூலாம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது கள்ளப்பட்டியை சேர்ந்த, ஆனந்த் என்பவரது பொக்லைன் வாகன டிரைவர், பின்நோக்கி ஓட்டி வந்தபோது ஸ்கூட்டி மீது மோதியது. இதில் துரைசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
