ADDED : நவ 26, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, சங்ககிரி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்து குறுக்குப்பாறையூரில் நடந்து வரும் திடக்கழிவு மேலாண் திட்டப்பணியை, வேறு இடத்துக்கு மாற்றக்கோரி, அப்பகுதி விவசாயிகள், தமிழக விவசாய சங்கம் சார்பில், 163ம் நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். அங்கு குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கால்நடை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தினர்.
மாநில பொதுச்செயலர் நடராஜன், துணை செயலர் பெருமாள், துணை தலைவர் துரைராஜ், சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

