/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
/
டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : டிச 14, 2024 01:13 AM
வாழப்பாடி, டிச. 14-
வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை, நேற்று மதியம், பாப்பான் ஏரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அதன் அலுவலகத்தில் அமர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பாப்பான் ஏரி பாசன வாய்க்காலில் முறையின்றி சாக்கடை வாய்க்கால் அமைக்கின்றனர். அதில் கழிவுநீர் வெளியே செல்லும்படி வழி இல்லை. இன்று(நேற்று) டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பணியாளர்கள், சாக்கடை கழிவுநீரை பாசன வாய்க்காலில் விட வாய்க்கால் தோண்டினர். இதுகுறித்து முறையிட செயல் அலுவலரை சந்திக்க, பாப்பான் ஏரி பாசன விவசாயிகள் வந்தோம்.
செயல் அலுவலர் இல்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்தும் பலனில்லை. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், நீர் பாசன வாய்க்காலை அழிக்க முயற்சிப்பது
கண்டிக்கத்தக்கது. அதனால் கழிவுநீர், விவசாய நிலம் மற்றும் நீர் பாசன வாய்க்காலில் செல்லாதபடி, முறையாக ஆய்வு செய்து விவசாயத்தை காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அங்கிருந்த அலுவலர்கள், ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், விவசாயிகள் கலைந்து
சென்றனர்.