/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிக்கனம்பட்டியில் 'சர்வே' விவசாயிகள் எதிர்ப்பு
/
சிக்கனம்பட்டியில் 'சர்வே' விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : நவ 21, 2024 01:30 AM
ஓமலுார், நவ. 21--
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு, காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி கிராமங்களில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன் இறுதி கட்டமாக இழப்பீடு வழங்க, நிலத்தில் உள்ள வீடு, மரம், பயிர் உள்ளிட்ட வகைப்பாடுகளை அளவீடு செய்யும் பணியை, நில எடுப்பு தாசில்தார்கள் பொன்னுசாமி, காந்திதேசாய், அலுவலர்களுடன் மேற்கொண்டு
வருகின்றனர்.
காமலாபுரத்தை முடித்து நேற்று சிக்கனம்பட்டியில் உள்ள நிலங்களை அளக்க, ஓமலுார் போலீசாருடன் சென்றனர். அப்போது, 'எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது' என தெரிவித்து, விவசாயிகள், அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசார், அதிகாரிகள் சமாதானப்படுத்தி, அளவீடு பணியை முடித்துச்சென்றனர்.

