/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் நல சேவை மையம் மானியத்தில் தொடங்கலாம்
/
உழவர் நல சேவை மையம் மானியத்தில் தொடங்கலாம்
ADDED : டிச 19, 2025 08:03 AM
பனமரத்துப்பட்டி: மானிய உதவியுடன் உழவர் நல சேவை மையம் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா அறிக்கை: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை டிப்ளமோ படித்த இளைஞர்கள், உழவர் நல சேவை மையம் தொடங்க, அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த உள்ளது. 600 சதுரடியில் உழவர் நல சேவை மையம் அமைக்க, 20 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்றுத்தரப்படும். அதில், 6 லட்சம் ரூபாய், அரசு மானியம் வழங்குகிறது. 300 சதுரடியில் தொடங்க, 10 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று தரப்படும். அதில், 3 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது. உழவர் நல சேவை மையம் மூலம் விவசாயிகளுக்கு தரமான விதைகள், மருந்துகள், உரங்கள், தொழில்நுட்பங்களை வழங்கலாம். விருப்பம் உள்ள இளைஞர்கள், https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விபரம் பெற, 97889 26221, 85081 66873 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

