sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மதுக்கூடமான கதிரடிக்கும் களம் சிரமத்துக்கு ஆளாகும் விவசாயிகள்

/

மதுக்கூடமான கதிரடிக்கும் களம் சிரமத்துக்கு ஆளாகும் விவசாயிகள்

மதுக்கூடமான கதிரடிக்கும் களம் சிரமத்துக்கு ஆளாகும் விவசாயிகள்

மதுக்கூடமான கதிரடிக்கும் களம் சிரமத்துக்கு ஆளாகும் விவசாயிகள்


ADDED : பிப் 20, 2025 07:17 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, பள்ளிதெருப்பட்டி ஊராட்சியில் மாக்கனுார் மயானம் உள்ளது. அதன் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான கதிர-டிக்கும் களம் உள்ளது. அங்கு விவசாயிகள் உற்பத்தி செய்த சோளம், நெல், கொள்ளு, மிளகாய், மஞ்சள், புளி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு பொருட்களை சூரிய ஒளியில் உலர்த்தி பதப்ப-டுத்துகின்றனர்.

ஆனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கதிரடிக்கும் களம், இரவில் மது அருந்தும் கூடமாக மாறிவிடுகிறது. அங்கு மது அருந்தும் கும்பல், காலி பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், இறைச்சி கழிவு, சிகரெட், புகையிலை பொருட்களை விட்டு செல்கின்-றனர். சில நேரங்களில் கண்ணாடி பாட்டில்களை உடைக்கின்-றனர். அங்கே சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர்.

இதனால் காலையில் வேளாண் பொருட்களை காய வைக்க, கதிர-டிக்கும் களத்துக்கு வரும் விவசாயிகள், சிதறி கிடக்கும் கண்-ணாடி, பிளாஸ்டிக்கால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில விவசா-யிகள், உற்பத்தி பொருட்களை காய வைக்காமல், திரும்பி செல்-கின்றனர். மற்ற விவசாயிகள், 'குடி'மகன்கள் விட்டு சென்ற கண்-ணாடி, பிளாஸ்டிக் குப்பையை சுத்தம் செய்த பின், பொருட்-களை காய வைக்கும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். அதனால் கதிரடிக்கும் களத்தை சீரழிக்கும், 'குடி'மகன்கள் மீது மல்லுார் போலீசார், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us