/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அக்., 4ல் உண்ணாவிரதம் 'பேக்சியா' அறிவிப்பு
/
அக்., 4ல் உண்ணாவிரதம் 'பேக்சியா' அறிவிப்பு
ADDED : செப் 22, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர் அசோசியேசன்(பேக்சியா) மாநில பொதுச்செயலர் திருநாவு.குமரேசன் கூறியதாவது:
பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ள சங்க பணியாளர்களுக்கு சம்பள சீரமைப்பு குழுவில் உள்ள குறைபாடுகளை களைய பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. தகுதியான அனைத்து விற்பனையாளருக்கும் எழுத்தர் பதவி உயர்வு வழங்கிய பின் நேரடி நியமனம் செய்ய விடுத்த கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 4ல், சேலம் கோட்டை மைதானத்தில் மாநில அளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.