/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை தந்தை, 2 புரோக்கர்களுக்கு 'காப்பு'
/
ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை தந்தை, 2 புரோக்கர்களுக்கு 'காப்பு'
ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை தந்தை, 2 புரோக்கர்களுக்கு 'காப்பு'
ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை தந்தை, 2 புரோக்கர்களுக்கு 'காப்பு'
ADDED : செப் 26, 2024 02:44 AM
இடைப்பாடி: பிறந்து, 18 நாளே ஆன ஆண் குழந்தையை, 1 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற தந்தை, இரு புரோக்கர்களை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சித்துார், தும்பொதியான்வளவை சேர்ந்தவர் சேட்டு, 25. கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி குண்டுமல்லி, 24. இவர்களுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 5 குழந்தைகள் பிறந்தன. தற்போது, 6வதாக ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து, 18 நாளே ஆன அந்த குழந்தையை, சேட்டு, குண்டுமல்லி
தம்பதியர், புரோக்கர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றனர்.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த தேவேந்திரன், குழந்தையை சட்டரீதியாக தத்தெடுக்க விரும்பினார். இதனால் அவர், நேற்று முன்தினம் சேலம் மாவட்ட
குழந்தைகள் நல அலுவலகம் சென்று தத்தெடுப்பதற்கான விபரம் கேட்டார். அப்போது சேட்டுவின் குழந்தை குறித்து தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், தேவேந்திரனிடம்,
சேட்டுவை தொடர்பு கொண்டு பேசும்படி கூறினர். அதன்படி அவரும் பேசி, குழந்தையை எடுத்துக்கொண்டு சேலம் வர அறிவுறுத்தினார்.இதையடுத்து குழந்தையுடன் சேலம் வந்த சேட்டு, குண்டுமல்லியை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஸ்ரீமுரளி பிடித்து விசாரித்தார். அதில் அவர்களுக்கு பிறந்த முதல் இரு குழந்தைகள்
இறந்ததும், 3, 4, 5வதாக பிறந்த ஒரு ஆண், இரு பெண் குழந்தைகளை, புரோக்கர்கள் மூலம் ஏற்கனவே தலா, 1 லட்சம் ரூபாய்க்கு விற்றதும் தெரிந்தது. மேலும், 6வதாக பிறந்த குழந்தையை
தற்போது விற்க முயன்றதும் தெரிந்தது.இதனால் குண்டுமல்லியை, குழந்தையுடன் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சேட்டுவை, பூலாம்பட்டி போலீசாரிடம், அலுவலர் முரளி ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த
போலீசார், சேட்டு, புரோக்கர்களான இடைப்பாடி முனுசாமி, 46, கவுண்டம்பட்டி செந்தில்முருகன், 46, ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் குழந்தை விற்பனையில் தொடர்புடைய
புரோக்கர்கள், சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை வாங்கியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.