/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை பூங்காவில் கடித்து குதறும் நாய்களால் பீதி
/
மேட்டூர் அணை பூங்காவில் கடித்து குதறும் நாய்களால் பீதி
மேட்டூர் அணை பூங்காவில் கடித்து குதறும் நாய்களால் பீதி
மேட்டூர் அணை பூங்காவில் கடித்து குதறும் நாய்களால் பீதி
ADDED : ஆக 18, 2025 01:53 AM
மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவில் நாய்கள் கடித்ததில், இரு நாட்களில் ஐந்து சுற்றுலா பயணியர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ள பூங்காவை பார்வையிட, சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உட்பட பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். மூன்று நாட்கள் தொடர் அரசு விடுமுறையால், பூங்காவை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
சமீபகாலமாக பூங்காவில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் நடமாடுகின்றன. நேற்று முன்தினம் பூங்காவை பார்வையிட்ட சுற்றுலா பயணியர் நான்கு பேரை, நாய் ஒன்று கடித்து காயப்படுத்தியது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
ஆந்திர மாநிலம், குப்பத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர், அணை பூங்காவை சுற்றிப்பார்க்க நேற்று வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த, 12 வயது சிறுவனை, தெருநாய் கடித்து காயப்படுத்தியது. பூங்காவில் சுற்றித்திரியும் தெருநாய்கள், பயணியரை கடிப்பது, திடீரென விரட்டுவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்களை பிடிக்க, கருத்தடை செய்ய, மேட்டூர் நகராட்சி கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.