/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதிய விளக்குகள் இல்லாததால் அச்சம்
/
போதிய விளக்குகள் இல்லாததால் அச்சம்
ADDED : அக் 13, 2025 03:33 AM
மகுடஞ்சாவடி: கண்டர்குலமாணிக்கம் ஊராட்சியில், காலனி வீதி முதல் வேப்பமரத்தான்காடு வரை செல்லும், 2 கி.மீ., சாலையில், போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்கள், அச்சத்துடன் நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது.
குறிப்பாக வழிப்பறிக்கு பயந்து செல்கின்றனர். தவிர விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதால், போதிய அளவில் மின்விளக்குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் கோபுர விளக்குஓமலுார் - மேச்சேரி பிரிவு சாலை வழியாகவும், தாரமங்கலம் வழியாகவும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அச்சாலையில் இரவில் போதிய வெளிச்சம் இல்லை. விபத்து நடக்கும் பகுதி என்பதால் அங்கு உயர் கோபுர மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், 3 ரோடு சந்திப்பு பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.