/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் அலுவலக கேன்டீனுக்கு அபராதம்
/
கலெக்டர் அலுவலக கேன்டீனுக்கு அபராதம்
ADDED : டிச 19, 2024 01:19 AM
சேலம், டிச. 19-
சேலம் கலெக்டர் அலுவலக கேன்டீனில் சுகாதாரமற்ற உணவு பரிமாற்றம், கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீபத்தில் ஆதார், மருத்துவ காப்பீடு போன்ற மக்கள் ஆவண நகல்களை பயன்படுத்தி, கேன்டீனில் போண்டா, பஜ்ஜி வழங்கும் வீடியோ பரவியது. அதன் எதிரொலியாக உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி, நேற்று முன்தினம் கேன்டீனில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சுருளி கூறுகையில், ''சுகாதார சீர்கேடு உள்ளிட்ட குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதால், துாய்மைப்பணி மேற்கொள்ள, கேன்டீன் நிர்வாகம் தானாக விடுமுறை அறிவித்துள்ளது,'' என்றார்.

