ADDED : ஜூன் 17, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. நடை மேம்பாலம் அமைப்பதற்காக, முதலாம் பிளாட்பாரம் அருகில், குழி தோண்டும் பணி நடந்து வந்தது. அதில் நிலத்தடியில் பதிக்கப்பட்டிருந்த மின் கேபிள்கள் பாதிக்கப்
பட்டுள்ளன.
நேற்று மாலை மழை பெய்த போது, மின் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்தது. சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இதில் கேபிள்கள் மட்டும் தீயில் கருகியது.