தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கூட்ஸ் ெஷட்டில் தீ விபத்தால் பரபரப்பு

கூட்ஸ் ெஷட்டில் தீ விபத்தால் பரபரப்பு

கூட்ஸ் ெஷட்டில் தீ விபத்தால் பரபரப்பு


ADDED : மார் 31, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம் செவ்வாய்பேட்டை, சத்திரம் பகுதியில் ரயில்வே கூட்ஸ் ெஷட் உள்ளது. இங்கு சரக்கு ரயில்களில் வரும் மூட்டைகளை, தொழிலாளர்கள் ராட்சத கிரேன் மூலம், ரயில் பெட்டியில் இருந்து இறக்கி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு, மூட்டைகளை இறக்கி கொண்டிருந்த போது, ராட்சத கிரேன் டீசல் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி தீ பிடித்துக் கொண்டது.

அப்போது பணியில் இருந்த ஊழியர்கள், அலறியடித்துக் கொண்டு தப்பினர். செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த தீயை, அரைமணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிரேனின் ஓரு பகுதி தீயில் எரிந்து நாசமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us