/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மளிகை கடையில் தீ;மூதாட்டி படுகாயம்
/
மளிகை கடையில் தீ;மூதாட்டி படுகாயம்
ADDED : செப் 28, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார், பழனியாபுரியை சேர்ந்த, வேலாயுதம் மனைவி சின்னப்பொண்ணு, 51. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று மாலை, 4:40 மணிக்கு மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட, கடைக்குள் இருந்த சின்னப்பொண்ணு, காயங்களுடன் வெளியே வந்தார்.
இதுகுறித்த தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் மளிகை கடையில், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதமாகின. காயம் அடைந்த சின்னப்பொண்ணு, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்துக்கான காரணம் குறித்து ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.