தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குப்பை கிடங்கு குடிசை வீட்டில் தீ விபத்து

 குப்பை கிடங்கு குடிசை வீட்டில் தீ விபத்து

 குப்பை கிடங்கு குடிசை வீட்டில் தீ விபத்து


ADDED : ஏப் 09, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: கெங்கவல்லியில், குப்பை கிடங்கு மற்றும் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி, கணவாய்காடு பகுதியில், டவுன் பஞ்.,சுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, நேற்று காலை, 6:30 மணியளவில், தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து, தகவலறிந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், காலை, 6:40 மணியளவில் நிகழ்விடத்துக்கு சென்றனர்.

ஒரு மணி நேரம் போராடி, 'பொக்லைன்' உதவியுடன் தீயை அணைத்தனர். அவ்வழியாக சென்ற நபர், தீ வைத்தது, விசாரணையில் தெரிந்தது.

* அதேபோல், கெங்கவல்லி அருகே, காளிப்பட்டியை சேர்ந்த போடி, 35, என்பவரின் தகர சீட் போடப்பட்ட குடிசை வீட்டில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது. காலை, 11:30 மணியளவில், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மதியம், 12:10 மணியளவில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். விபத்து குறித்து, தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us