ADDED : ஆக 21, 2026 01:09 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி: வாழப்பாடி, பேளூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் ஜான் பாஷா, 40. இவரது விவசாய தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி இறங்கி, நேற்று இரவு, 7:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது.
இதை அறிந்து, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 10 நிமிடத்தில் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
