ADDED : செப் 24, 2026 01:29 AM
சேலம்: சேலம், மேட்டு மக்கான் தெரு பகுதியை சேர்ந்தவர் நுார்முகமது, 30. இவர் கிச்சிப்பாளையம், சன்னியாசி குண்டு பகுதியில், பஞ்சு குடோன் வைத்துள்ளார். இதில் 7 பேர் வேலை செய்து வருகின்-றனர். இந்நிலையில், நேற்று குடோனில் நுார்முகமது மற்றும் ஊழியர்கள் தலையணை செய்து கொண்டிருந்த போது இரவு, 8:00 மணிக்கு குடோனில் ஒரு பகுதியில் கரும்புகை கிளம்பியது. இதை பார்த்த ஊழியர்கள், நுார் முகமது விடம் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கிருந்து அனைவரும் வெளியேறினர். சிறிது நேரத்தில் கரும்புகையானது அதிக அளவில் ஏற்பட்டு தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஞ்சு என்பதால் தீ மளமளவென பரவியது. பின்னர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், நான்கு வாகனங்களில் விரைந்து வந்து பஞ்சு குடோனில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து, 3 மணி-நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். அதற்குள் தீ பரவி பஞ்சு முழுவதும் எரிந்து நாசமானது.
தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது கார-ணமா என்பது குறித்து, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
