தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பட்டாசு வெடித்ததால் தீ விபத்து பாக்கு, தென்னை மரங்கள் நாசம்

பட்டாசு வெடித்ததால் தீ விபத்து பாக்கு, தென்னை மரங்கள் நாசம்

பட்டாசு வெடித்ததால் தீ விபத்து பாக்கு, தென்னை மரங்கள் நாசம்


ADDED : பிப் 08, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 08:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, மயானத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் தோட்-டத்தில் இருந்த பாக்கு, தென்னை மரங்கள் தீயில் கருகின.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை-அக்க-லாம்பட்டி சாலையில், டாஸ்மாக் கடைக்கு எதிரே முத்துசாமி, 60, என்பவர் தோட்டம் உள்-ளது. இந்த தோட்டத்தில் தென்னை, பாக்கு மரங்-களை வளர்த்து வருகிறார். இவருடைய தோட்-டத்திற்கு அருகிலேயே மயானம் உள்ளது. நேற்று, மயானத்திற்கு ஒருவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு வந்தனர். அப்போது பட்டாசுகளை கொளுத்தியுள்ளனர். அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி, முத்துசாமியின் தோட்டத்தில் விழுந்தது. இதில் காய்ந்த செடி, கொடிகளில் தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தோட்டம் முழு-வதும் பரவியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துசாமி, ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலு-வலர் பலகார ராமசாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுவது-மாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், 50க்கும் மேற்பட்ட தென்னை, பாக்கு மரங்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமாகின. இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us