/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதமலை தொடரில் தீ ஏராளமான மரங்கள் நாசம்
/
போதமலை தொடரில் தீ ஏராளமான மரங்கள் நாசம்
ADDED : மார் 01, 2026 08:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே நல்லியாம்புதுார், பிச்சம்பாளையம், பேரங்காடு பகுதிகள், போத மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. நேற்று மாலை, 6:30 மணிக்கு போத மலையில் தீப்பற்றி எரிந்தது.
அடிவாரத்தில் இருந்து மலை உச்சியை நோக்கி கொழுந்து விட்டு எரிந்தது. பல ஹெக்டேர் பரப்பளவுக்கு வேகமாக தீ பரவியதால், ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் சாம்பலாகின. சிறு வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டன. போதமலை தொடரில் தீ தடுப்பு வேலி அமைத்து இதுபோன்ற தீ விபத்தை தடுக்க, ராசிபுரம் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

