/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜி.ஹெச்.,ல் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
/
ஜி.ஹெச்.,ல் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
ADDED : செப் 12, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, சங்ககிரி தீயணைப்புத் துறை சார்பில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, தீ தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி நேற்று நடந்தது.
சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள், தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் அவசர காலங்களில், எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கினர். தலைமை மருத்துவர் சரவணகுமார், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.