ADDED : டிச 23, 2024 10:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி, மீனவர் தெருவை சேர்ந்த, கூலித்தொழிலாளி சரோஜா, 60. நேற்று மதியம், 2:00 மணிக்கு, காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் இருந்து, அடுப்புக்கு செல்லும் ரெகுலேட்டரில் காஸ் கசிந்து தீப்பற்றியது.
உடனே சரோஜா வீட்டில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, 2:10க்கு அவர் அளித்த தகவல்படி, 10 நிமிடத்தில் கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள் வந்து, ரெகுலேட்டரில் ஏற்பட்ட தீயை, ஈரச்சாக்கு மூலம் அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு, ரெகுலேட்டரில் ஏற்படும் தீ விபத்து தவிர்ப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.