ADDED : அக் 24, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள பஞ்சு குடோன் மில்லில் நேற்று இரவு, 11:50 மணிக்கு கரும்புகை வெளியேறியது. இதையடுத்து தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 3 வாகனங்களில் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்கு மேலாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.