/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.32,140 மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்
/
ரூ.32,140 மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்
ADDED : அக் 31, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசாருக்கு, நவதி பகுதியிலுள்ள மொபைல் கடையில், உரிமம் பெறாமல் பட்டாசு பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் சோதனை செய்தபோது, 32,140 ரூபாய் மதிப்புள்ள, 70 பட்டாசு பெட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஓசூர் எழில் நகரில் வசிக்கும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம், 26, என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.