ADDED : மார் 02, 2026 05:17 AM

சேலம்; மத்திய அரசின், பிட் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களிடையே உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, 'சண்டேஸ் ஆன் சைக்கிள்' நிகழ்ச்சி, 'ஆரோக்கிய இந்தியா உருவாக்குதல்' தலைப்பில், சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் அருகே நேற்று நடந்தது.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய பேரணியை, மாவட்ட தீய-ணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி, கொடிய-சைத்து தொடங்கி வைத்தார்.'வலிமையான இந்தியாவுக்கு சைக்கிள் ஓட்-டுவோம்' முழக்கத்துடன் பேரணி நடந்தது.
நான்கு ரோடு, அண்ணா பூங்கா வழியே சென்ற பேரணி, காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.
ஆணைய சேலம் மைய பொறுப்பாளர் விட்லர்-குமார், உதவி மாவட்ட அலுவலர் சிவகுமார், மாவட்ட தீத்தடுப்பு குழு நிலைய அலுவலர்கள் ராஜசேகரன், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்-றனர்.
