ADDED : மார் 28, 2026 05:32 AM

சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிக-ளிலும் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்-கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம், அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லுா-ரியில், 'சேலத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு' வடிவில் மாணவியர் அணிவகுத்து நின்று விழிப்-புணர்வை வெளிப்படுத்தினர்.
மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் அனைவரும் ஓட்டுப்-போடுவதை வலியுறுத்தியும், ஓட்டளிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தல், குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்க-ளாகிய மாணவியர் அனைவரும் தவறாமல் ஓட்-டுப்போடுவது, 1950 என்ற வாக்காளர் உதவி எண், தேர்தல் தொடர்பான புகார்களை தெரி-விக்க, cVIGIL செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டன. தெற்கு தொகுதி தேர்தல் அலு-வலர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்-கேற்றனர்.கும்மியடித்த பெண்கள்
அதேபோல் சங்ககிரி வருவாய்த்துறை சார்பில், குள்ளம்பட்டியில் உள்ள அரசிராமணி டவுன் பஞ்-சாயத்து அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் பணியா-ளர்கள், மக்கள், ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோலமிட்டனர். மேலும் பெண்கள் அனைவரும் சேர்ந்து கும்மியடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
