ADDED : ஆக 13, 2026 03:00 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ச.ஆ.,பெரமனுார்
பச்சையம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த, 5ல் பூச்சாட்டுத-லுடன் தொடங்கியது. நேற்று மாலை, அக்னி குண்டம் இறங்கும் பக்தர்கள், மானியக்காடு கிணற்றில் நீராடினர்.
அவர்களை, பூசாரி சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். அங்கிருந்து ஊர்வல-மாக வந்த ஏராளமான பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டி-ருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்தனர்.
