/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மும்பை, திருப்பதி, திருச்சி, மதுரைக்கு சேலத்தில் இருந்து விமான இயக்கம்'

ADDED : மே 08, 2024 04:46 AM
ஓமலுார் : சேலத்தில் இருந்து மும்பை, திருப்பதி மற்றும் திருச்சி, மதுரைக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு, அலையன்ஸ் ஏர், இண்டிகோ விமான சேவை தற்போது தினமும் நடக்கிறது. இதில் 'உடான்' அல்லாத திட்டத்தில், இண்டிகோ நிறுவனம், சென்னைக்கு விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் 'ஏர் சபா' விமான நிறுவனம், மதுரை, திருச்சி, திருப்பதி, மும்பை, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை இயக்க, விமான போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இதுகுறித்து சேலம் விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாயா கூறியதாவது: சேலத்தில் இருந்து, 'ஏர் சபா' நிறுவனம், பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க, மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளன. ஜூலை முதல் விமான இயக்கம் தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.